உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாழடைந்த பி.எஸ்.என்.எல்., கட்டடங்கள்

பாழடைந்த பி.எஸ்.என்.எல்., கட்டடங்கள்

பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், பாழடைந்து கிடக்கும் பி.எஸ்.என்.எல்., கட்டடங்களை மாற்று பயன்பாட்டிற்குகொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனியார் மயமாக்கல் கொள்கை காரணமாக, படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.இதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.பல்லடம் வட்டாரத்தில், பல்லடம், கரடிவாவி, வே.கள்ளிப்பாளையம், மாதப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள் மூடப்பட்டு, இங்க வேலை பார்த்து வந்த பணியாளர்கள், கோவை, திருப்பூர் அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டனர்.பல்லடத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம், கடந்த ஒரு மாதத்திற்கு முன் மூடப்பட்ட நிலையில், தற்போது, ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இங்கு வேலை பார்த்து வருகிறார்.இக்கட்டடத்தை தனியாருக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மூடப்பட்ட கரடிவாவி, கள்ளிப்பாளையம், மாதப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படாமல் பாழடைந்து காணப்படுகின்றன. செடி - கொடிகள் முளைத்தும், புதர்கள் மண்டியும் காணப்படுவதால், விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாகவும், சமூக விரோதி களின் கூடாரமாகவும்மாற வாய்ப்பு உள்ளது என்பதால், கிராம மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து கிடக்கும் கட்டடங்களை புதுப்பித்து, மாற்றுப் பயன்பாட்டுக்கோ அல்லது தனியார் பயன்பாட்டுக்கோ விட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை