உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமலர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டியில்...மாணவர், பெற்றோர் குவிந்தனர்! சந்தேகங்கள் நீங்கி தெளிவு பெற்றதாக மகிழ்ச்சி

தினமலர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டியில்...மாணவர், பெற்றோர் குவிந்தனர்! சந்தேகங்கள் நீங்கி தெளிவு பெற்றதாக மகிழ்ச்சி

திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் சார்பில், திருப்பூரில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்; தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து தெளிவு பெற்றனர்.தமிழக அரசு, தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளமான டி.என். இ.ஏ., வாயிலாக, இன்ஜினியரிங் படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கிறது. அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்களும், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களும், கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ள மாணவர், பெற்றோரின் குழப்பத்தை தீர்க்க, 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'இன்ஜினியரிங் கவுன்சிலிங், 2025' வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிகழ்ச்சியை சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிமுதல்வர் ரமேஷ், கற்பகம் அகாடமி ஆப் ைஹயர் எஜூகேசன் இயக்குனர் பாலாஜி, சென்னை அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன், கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.'தினமலர்' நாளிதழுடன், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆகியன நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.கல்வியாளர்கள், இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினர். மாணவர்கள், பெற்றோர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இதன் மூலம், ''இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகளை முழுமையாகப் புரிந்து கொண்ேடாம்; எந்தப் பாடங்களைத் தேர்வு செய்வது என்பதில் தெளிவைப்பெற்றோம். இதற்காக 'தினமலர்' நாளிதழ் மற்றும் கல்வி நிறுவனத்தினருக்கு நன்றி'' என்று மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை