உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடனடித் தீர்வு; சாத்தியமாக்கும் தினமலர்

உடனடித் தீர்வு; சாத்தியமாக்கும் தினமலர்

'தி னமலர்' நாளிதழ் திருப்பூர் இணைப்பில் வெளியாகும் 'இன்பாக்ஸ்' பகுதி, பொதுமக்கள், தங்கள் குறைகளை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க உதவுகிறது. குடிநீர், சாலை, சாக்கடை, மின்சாரம் என வாசகர்கள் தெரிவித்த எண்ணற்ற புகார்களுக்கு, உடனடித்தீர்வு சாத்தியமாகியிருக்கிறது. அதிகாரிகளுக்கு மனுவாகக் குவித்தும் தீர்வு காணப்படாத பல்வேறு பிரச்னைகள், 'தினமலர்' நாளிதழில்,ஓரிரண்டு வரிகளில் 'நச்'சென்று சுட்டிக்காட்டிப்பட்டவுடன், சுடச்சுட தீர்வு காணப்பட்டிருக்கின்றன. ''எங்கள் மனுக்கள் பலமுறை குப்பைத்தொட்டிகளுக்குத்தான் செல்கின்றன. சில சமயங்களில் மனிதாபிமானமும், சேவையுள்ளமும் கொண்ட அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண நினைத்தாலும், அதிகார வர்க்கமோ, அரசியல் தலையீடோ பிரச்னைகளைச் சரிசெய்யாமல் தடுத்துவிடுகிறது. 'தினமலர்' நாளிதழில் செய்தியாகவோ, வாசகர் சுட்டிக்காட்டும் பிரச்னையாகவோ இடம்பெற்றுவிட்டால், இந்தத் தடைஅகன்றுவிடுகிறது. பிரச்னைகளைச் சரிசெய்யாத அதிகாரிகள்கூட, உடனடியாகச் சோம்பல் முறித்து, தீர்வு காணக் களமிறங்குகின்றனர். தங்கள் எழுத்துகளுக்கும் வல்லமை உண்டு என்பதை 'தினமலர்' வாசகர்களே நன்குணர்ந்துள்ளனர். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதானே உண்மையான மக்கள் சேவை! அதை மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் மேற்கொள்வதுதானே கடமை! கடமையைச் செய்ய மறக்கும்போது, எழுத்துச் சாட்டையைச் சுழற்றியாக வேண்டியிருக்கிறது... அதைத்தான்செய்கிறது 'தினமலர்' நாளிதழ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை