உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

திருப்பூர் : கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாற்ற வேண்டும் எனக்கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் கட்ட, எல்.ஆர்.ஜி., கல்லூரி பின்புறமுள்ள இடம் பரிசீலனை செய்யப்படுகிறது. அந்த இடம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் சுற்றுப் பகுதியில் பூம்புகார் நகர் என்ற இடத்தில் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு அளித்தனர்.அதில், 'எல்.ஆர்.ஜி., கல்லூரி பின் புறம் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். பூம்புகார் நகரில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. கலெக்டர் அலுவலகம் கட்டினால் எங்களது வீடுகளுக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் உள்ளது. எங்கள் குடியிருப்புகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி