தானியங்கள் நேரடி கொள்முதல் செய்யணும்
உடுமலை; உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரியாக கொண்டைக்கடலை, கொத்தமல்லி, சோளம் உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். விவசாயிகள் கூறியதாவது: மானாவாரி சாகுபடியை ஆதாரமாக கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். ஆனால், அறுவடை சமயத்தில், எந்த தானியத்துக்கும் விலை கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் தானியங்கள் வாங்கி இருப்பு வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, அறுவடை சீசனில், தானியங்களுக்கு, ஆதார விலை நிர்ணயித்து, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், வேளாண்துறை வாயிலாக கொள்முதல் செய்யலாம். வரும் ஆடிப்பட்டத்தில், இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.