உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பராமரிப்பு உதவித்தொகை  வழங்க மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் 

பராமரிப்பு உதவித்தொகை  வழங்க மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் 

திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையாக, மாதம், 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட பிரதிநிதிகள் சர்க்கரையப்பன், செல்வன், வேலுசாமி, சண்முகம் முன்னிலையில், ஏராளமான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக, மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது.தற்போதைய விலைவாசி உயர்வின் அடிப்படையில், மாதாந்திர பராமரிப்பு உதவியை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரேஷன் கடைகளில், அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டும். 2023ம் ஆண்டு ஜூலை 24ல் வெளியிடப்பட்ட அரசாணையை செயல்படுத்த வேண்டும்.பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட, அனைத்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், ஊர்தி படியை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின், கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ