உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேரிடர் கால தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேரிடர் கால தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அவிநாசி; அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் செய்து காட்டினார்.தீயணைப்பு நிலைய இன்ஸ்பெக்டர் நவீந்திரன் தலைமையில், நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், கவச உடை அணிந்து தீ விபத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றுவது, நச்சுப்புகை ஏற்படும் தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உடையணிந்து காப்பாற்றுவது, வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டரை கையாளும் முறை, காஸ் கசிந்து இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் மாணவிகள் முன் நடத்தி காட்டப்பட்டது.பொதுமக்கள் அவசரகால உதவி எண்களாக 100, 101, 108 மற்றும் 112 குறித்து எந்தெந்த எண்களில் அழைத்தால் எந்தெந்த துறை உடனடியாக பதிலளிக்கும் என்பதை விளக்கினர். தலைமை ஆசிரியர் புனிதவதி, ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை