உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட தடகள போட்டி முருகு மெட்ரிக் அபாரம் 

மாவட்ட தடகள போட்டி முருகு மெட்ரிக் அபாரம் 

திருப்பூர்; பள்ளிகல்வித்துறை நடத்திய மாவட்ட தடகள போட்டியில், திருப்பூர், அண்ணாநகர், முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றனர்.இப்பள்ளி மாணவர், ஆகாஷ், 14 வயது பிரிவு, 600 மீ., ஓட்டத்தில், முதலிடம், மாணவர், ஹரிஷ் 400 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்றனர். அத்துடன், மாணவர், ஹரிஷ் 100 மீ., மற்றும், 200 மீ, தடகளத்தில் மூன்றாமிடம் பெற்றார், 19 வயது பிரிவில், மாணவி ரஞ்சனி, 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடம். முதலிடம் பெற்ற மாணவர்கள் இருவரும் ஈரோட்டில் நடக்கும் மாநில தடகள போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.மாவட்ட தடகள போட்டியில் வெற்றியை வசமாக்கிய மாணவ, மாணவியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராமச்சந்திரன், ஸ்ரீராம்சுரத் ஆகியோரை பள்ளி தாளாளர்கள் பசுபதி, சசிகலா உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ