மாவட்ட அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
திருப்பூர்: ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள, ஐந்து பேர் கொண்ட மாவட்ட குழு நேற்று பொறுப்பேற்றது. அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், உதவி கமிஷனர் தமிழ்வாணன் முன்னிலையில், தலைவராக சுப்பிரமணியம், உறுப்பினர்களாக முத்துராமன், கலைச்செல்வி, சாமி, கலாமணி பொறுப்பேற்றனர். கோவில் செயல் அலுவ லர் வனராஜா மற்றும் ஆய்வாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். காலியாக உள்ள கோவில்களுக்கு விண்ணப்பம் பெற்று, வரும் டிச., மாதத்துக்குள் அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர்கள் தெரிவித்தனர்.