உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும் ஜூன் 2ல் மாவட்ட ஹாக்கி அணிக்கான தேர்வு

வரும் ஜூன் 2ல் மாவட்ட ஹாக்கி அணிக்கான தேர்வு

உடுமலை; திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் சார்பில், மாவட்ட அணிக்கான தேர்வு போட்டி ஜூன் 2ம்தேதி நடக்கிறது.மாநில அளவில் மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் ஆண்களுக்கான ஹாக்கிப்போட்டி, ஜூன் 4 முதல் 8ம் தேதி வரை துாத்துக்குடியில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு மாவட்ட அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் சார்பில், ஜூன் 2ம்தேதி நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட அணிக்கான தேர்வு நடக்கிறது. தேர்வு மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது. இவ்வாறு திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி