உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம்

நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம்

உடுமலை,; திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை (30ம் தேதி), காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகம், அறை எண், 240ல், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில், அனைத்துத்துறை அலுவலர்களும், விவசாயிகளும் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், விவசாயிகள் நுண்ணீர்ப்பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு வழிகாட்டும் வகையில், வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்ட வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது.உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு, நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ