மாவட்ட மாரத்தான் நாளை நடக்கிறது
திருப்பூர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மாரத்தான் ஓட்ட போட்டி, திருப்பூரில், நாளை (2ம் தேதி) நடைபெற உள்ளது. சிக்கண்ணா அரசு கல்லுாரியில், காலை, 6:00 மணிக்கு ஓட்டம் துவங்கும். வஞ்சிபாளையம் வரை சென்று, மீண்டும் சிக்கண்ணா கல்லுாரியை வந்தடையும். 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., - பெண்களுக்கு 5 கி.மீ., துாரம். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10; பெண்களுக்கு 5 கி.மீ., துாரத்துக்கு நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்போர், கட்டாயம் வயது சான்று கொண்டுவரவேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான சான்றிதழ் கொண்டுவரவேண்டும். ஆதார் கார்டு நகல் வைத்திருக்கவேண்டும். மாரத்தானில் வெற்றிபெறுவோருக்கான பரிசு தொகை, அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஆகவே, போட்டியில் பங்கேற்போர், தங்கள் வங்கி பாஸ்புக் நகலை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். போட்டிக்கு ஒரு மணி நேரம் முன்னரே, போட்டி துவங்கும் இடத்துக்கு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0421 2244899 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.