உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி ஷாப்பிங் களைகட்டியது

தீபாவளி ஷாப்பிங் களைகட்டியது

திருப்பூர்: தீபாவளி நெருங்கும் நேரத்தில், ஜவுளி, பர்னிச் சர் உள்ளிட்ட கடைகளில் விற்பனை களைகட்டியது. பட்டாசு விற்பனையும் சிறப்பாக இருந்தது. கடந்த இரண்டு வாரமாக, திருப்பூரில் உள்ள ஜவுளிக்கடை, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை, நகைக்கடை, மொபைல் போன் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை, அதிரடியாக பரிசளிப்புடன் நடந்து வருகிறது பண்டிகை நெருங்குவதால், சுற்றுப்பகுதிகளில் இருந்து திருப்பூர் வரும் மக்களும் , வடமாநில தொழிலாளரும் தங்களது, ஷாப்பிங்கை துவங்கிவிட்டனர். ஞாயிறு மட்டும் இயங்கும் காதர்பேட்டை பனியன் ஆடை விற்கும் கடைகள், கடந்த சில நாட்களாக காலை, 10:00 மணி துவங்கி, இரவு, 9:00 மணி வரை இயங்கி வருகின்றன. மாநகரப்பகுதியில் உள்ள முக்கிய ரோடுகளில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத பகுதிகளில், ரோட்டோர கடைகள் அமைத்தும், விற்பனையை துவக்கியுள்ளனர். ஆண்கள், பெண்களுக்கான ஆடைகள், காலணிகள், பெல்ட் வகைகள், கண் கண்ணாடிகள், வாட்ச் கடைகள், பெண் குழந்தைகளுக்கான பேன்சி கடைகள், பேக் கடைகள், வீட்டு அலங்கார பொருட்கள் விற்கும் கடைகள் என, ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு, பட்டாசுக்கடைகளும் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன; குடும்பத்துடன் வந்து, பட்டாசு வாங்கி செல்வதும் அதிகரித்துள்ளது. இதேபோல், 'ஸ்வீட் ஸ்டால்'களில், விதவிதமான இனிப்பு பதார்த்தங்கள் செய்து, அரை கிலோ, ஒரு கிலோ 'கிப்ட்' பாக்ஸ்களாக விற்பனை களைகட்டியிருக்கிறது. நேற்று காலை முதல், கடைவீதிகளில் விற்பனை சூடுபிடித்திருந்தது; இருப் பினும், மாலை, 6:00 மணிக்கு பிறகு, மழை பெய்ய துவங்கியதால், ரோட்டோர கடைகளை மூடிவிட்டு, வியாபாரிகள் அமர்ந்திருந்தனர். இருப்பினும், இன்றும், நாளையும் பகல் நேர விற்பனை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை