தி.மு.க.,வினர் அன்னதானம்
திருப்பூர், 15 வேலம்பாளையம், 10வது வார்டு, தி.மு.க., துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, கட்சி கொடியேற்று விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆத்துப்பாளையத்தில் நடந்தது. வார்டு கவுன்சிலர் பிரேமலதா தலைமை வகித்தார். கட்சியின் வார்டு செயலாளர் சசிகுமார், முன்னிலை வகித்தார். வடக்கு மாநகர அயலக அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். எம்.எல்.ஏ., செல்வராஜ், கட்சி கொடியேற்றி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சைவ பிரியாணி மற்றும் கேசரி வழங்கப்பட்டது. மேயர் தினேஷ்குமார், வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.