உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடமைகளை தவறாமல் காலத்தில் செய்யுங்கள்

கடமைகளை தவறாமல் காலத்தில் செய்யுங்கள்

அவிநாசி; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில்,வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஜெயமூர்த்தி பேசியதாவது:நமக்குப் பிடித்த இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தால் ஈரேழு பிறவிக்கும் பலனளிக்கும்.நமக்கென்று உள்ள கடமைகளை என்றென்றும் தவறாமல் அதற்குரிய காலத்தில் செய்து விட வேண்டும்.அவசியமான நேரத்தில் அதற்கான இடங்களில் நம்மிடமிருந்து உதிரும் சொற்கள் நம்மை பிறரிடம் இருந்து உயர்ந்த இடத்தில் கொண்டு செல்லும்.தேவையற்ற இடத்தில், அதற்கான சூழல் இல்லாத நேரத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்களால், நம்முடைய மதிப்பு இறங்கும்.நல்லவருக்கு எங்கு சென்றாலும் செல்லும் இடங்களில் சிறப்பான மரியாதை கிடைக்கும். பிறருடைய செயல்பாட்டை பற்றி குறை கூற நமக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி