உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மேய்ச்சல் ஆடுகளை குறிவைக்கும் நாய்கள்

மேய்ச்சல் ஆடுகளை குறிவைக்கும் நாய்கள்

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தில், மானாவாரி பயிரிடும் விவசாயிகளின் பிரதான தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. முன்பு ஆடு மேய்ப்பதற்கு என்றே தனியாக ஓர் ஆளை நியமித்திருந்தனர். தற்போது, ஆடு மேய்ப்பதற்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயிகள் ஆடு மேய்ப்பதற்கான செலவை குறைக்க உயிர்வேலியை அழித்துவிட்டு, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்கத் துவங்கினர். காலையில் ஆட்டை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு மாலையில் சென்று அவற்றை திரும்ப அழைத்து வந்தனர். இதன் மூலம் ஆட்கள் கூலியை மிச்சப்படுத்த முடிந்தது. சில ஆண்டுகளாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. கம்பி வேலி அமைத்திருந்தாலும் அதில் நாய்கள் உள்ளே நுழைந்து விடுகிறது. இதனால் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டால் காலை முதல் மாலை வரை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய நெருக்கடி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாவிட்டால் நாய்களுக்கு ஆடுகள் இரையாகி விடுகிறது. சொந்த ஆட்கள் மூலம் ஆடுகளை கவனித்தால் பிற வேலைகளை செய்ய முடிவதில்லை. ஆட்களை நியமித்தால் உற்பத்தி செலவு அதிகரித்து விடுகிறது. ஆடு வளர்ப்பு தொழில் ஊசலாட்டத்தில் உள்ளது. ''நாய்கள் கடித்து இறக்கும் மற்றும் காயமடையும் ஆடுகள் குறித்து முழுமையாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவும் எங்களால் முடிவதில்லை'' என்கின்றனர் விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை