உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கைம்மாறு வேண்டா... சேவையே உயிர் மூச்சாக!

கைம்மாறு வேண்டா... சேவையே உயிர் மூச்சாக!

'வாழவே வழியில்லை' என்ற நிலையில், எதிர்காலம் தொலைத்து, கையறு நிலையில் வாழ வழி தேடும் பலருக்கு வழிகாட்டியாக இருப்பது, பெருமைக்குரிய விஷயம். அதற்கு சொந்தக்காரராக இருக்கிறார், இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனர் இந்திரா சுந்தரம்.ஏழ்மை நிலையில் உள்ளோர், ஆதரவற்றோர் என, துயரத்தில் வாழும் பலருக்கும் இயன்றவரை உதவி செய்து வருகிறார். சென்னை வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவினார். பிழைக்க வழியின்றி தவிப்போருக்கு, உழைக்க கற்றுத்தந்து, அவர்களின் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ள உதவி செய்து வருகிறார்.அவர் கூறியதாவது:திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறையுடன் இணைந்தும், பல்வேறு சேவைகளை செய்து வருகிறேன். உதவி கேட்போர் இருக்கும் இடத்துக்கே நேரில் சென்று, அவர்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.வரும் நாட்களில், விதவை பெண்கள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடபட்டவர்கள் போன்றோரின் வாழ்க்கைக்கு வழிகாட்ட, அவர்களுக்கு ஏற்ற தொழில் துவங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.பெண்கள் பலர், வேலைக்கு சென்று பணிபுரிவதை விட, சுய தொழில் செய்து வாழ வேண்டும் என, விரும்புகின்றனர். திருநங்கை, திருநம்பியர் பலரும், உழைத்து சம்பாதித்து வாழ வேண்டும் என, விரும்புகின்றனர்; அவர்களுக்கும் உதவி செய்கிறேன். ஏழை, எளியோருக்கு அடிப்படை மருத்துவம் வழங்க, ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதும் என் எண்ணம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ