உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடி, மின்னல் நேரத்தில் போன் பேச வேண்டாம்

இடி, மின்னல் நேரத்தில் போன் பேச வேண்டாம்

உடுமலை; இடி, மின்னல் நேரத்தில் மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் தொலைபேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட மின் ஆய்வாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது: இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது; உடனடியாக, பெரிய கட்டடம், வீடு, பஸ், கார், வேர் போன்ற வாகனங்களுக்குள் சென்றுவிட வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் ஸ்டாப் நிழற்குடையில் தஞ்சம் புகக்கூடாது.மழை காலங்களில், மின்சார பெட்டிகளின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். இடி, மின்னல் நேரத்தில் தஞ்சமடைய இடம் இல்லாதபட்சத்தில், மின்கம்பிகள், மின்கம்பம், மரங்கள், உலோக கம்பிவேலி இல்லாத தாழ்வான பகுதிகளுக்கு சென்றுவிடலாம்.மழைகாலத்தில், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்; ஈரமான கைகளால் மின் சுவிட்ச்களை இயக்க கூடாது.இடி, மின்னல் நேரத்தில் மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்; மின்சாதங்களை சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும். ஜன்னல், கதவு அருகே நிற்கக்கூடாது.மின்சார தீ விபத்து ஏற்படும் நேரத்தில், தண்ணீர் கொண்டு தீயை அணைக்க கூடாது. மின்சாதனங்களில் தீ ஏற்படும் போது, மின்சார தீ விபத்துக்குண்டான தீயணைப்பான் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.உலர்ந்த ரசாயனப்பொடி, அல்லது கரியமிலவாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும்.தீ விபத்து மின்சாரத்தினால் ஏற்பட்டது என்றால், உடனே, மெயின் சுவிட்ச்சை அணைத்து வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை