உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் தட்டுப்பாடு; கிராமங்கள் தவிப்பு

குடிநீர் தட்டுப்பாடு; கிராமங்கள் தவிப்பு

பல்லடம்; பல்லடம் ஒன்றியத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட கரைப்புதுார், கணபதிபாளையம், ஆறுமுத்தாம்பாளையம்; திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஆகிய, 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 155 குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், கடந்த, 2023ல் மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்பட்ட குக்கிராமங்களில் வசிக்கும் குடியிருப்புகளுக்கு, குடிநீர் முறையாக வினியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கரைப்புதுார் கிராம பொதுமக்கள் கூறியதாவது:கரைப்புதுார், கணபதிபாளையம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர, தொழில், வேலைவாய்ப்பு கருதி, வெளி மாநில, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர்.ஊராட்சிகளில், மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.குடிநீர் பற்றாக்குறையை போக்க, 2023ம் ஆண்டு மேட்டுப்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.திட்டம் துவங்கிய சில நாட்கள் மட்டுமே குடிநீர் முறையாக வினியோகிக்கப்பட்ட நிலையில், அதன் பின், படிப்படியாக குடிநீர் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது. தற்போது, இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் முறையாக கிடைப்பதில்லை.ஏற்கனவே, குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படாததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.எனவே, இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை