உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் நிறுத்தம்; மாநகராட்சி தகவல்

குடிநீர் நிறுத்தம்; மாநகராட்சி தகவல்

திருப்பூர்: மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இரு நாட்கள் குடிநீர் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்றும்,நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மூன்றாவது குடிநீர் திட்டத்தினால் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்பதால், குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ