கால்நடைகளுக்கு உணவாகும் முருங்கை
பொங்கலுார் : பங்குனி மாதம் முருங்கை சீசன் காலம் ஆகும். வறட்சி காலத்தில் முருங்கை நன்கு காய்க்கும். கார்த்திகை முதல் மழை இல்லாததால் அபரிமிதமான விளைச்சல் கிடைத்துள்ளது. தேவையை விட உற்பத்தி அதிகரித்ததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் கிலோ இரண்டு ரூபாய்க்கு விலை போகிறது. விவசாயிகள் கூறுகையில், 'பறிப்பு கூலி கிலோவுக்கு பத்து ரூபாய் ஆகிறது.முருங்கையை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளோம். சினை மாடுகள் தவிர மீதமுள்ள கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கிறோம்,' என்றனர்.