உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி: இன்று இறுதிப் போட்டி கோப்பையை வெல்லப்போவது யார்?

டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி: இன்று இறுதிப் போட்டி கோப்பையை வெல்லப்போவது யார்?

திருப்பூர் : தேசிய அளவில், 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2025, கிரிக்கெட் போட்டியை திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' நடத்துகிறது.கடந்த, 12ம் தேதி போட்டிகள் துவங்கியது. பிரிவு 'ஏ' மற்றும் 'பி' பிரிவில் பங்கேற்ற தலா நான்கு அணிகள் வீதம், எட்டு அணிகள் பங்கேற்றது. லீக் போட்டிகளை தொடர்ந்து, நேற்று அரையிறுதி போட்டி நடந்தது.முதலாவது அரையிறுதி போட்டியில், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் - கோவா, ஸ்பார்க்கிளிங் ஸ்டார்ஸ் அசோசியேஷன் அணிகள் மோதின.டாஸ் வென்ற திருப்பூர் அணி, 30 ஓவரில், நான்கு விக்கெட் இழந்து, 280 ரன் குவித்தது. அசத்தலாக ஆடிய, திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' பேட்ஸ்மேன் அபிநந்தன், 79 பந்துகளில், 18 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உட்பட, 126 ரன் எடுத்து அசத்தினார். நிதிலன், 27 பந்துகளில், 42 ரன் குவித்தார்.கடின இலக்கை விரட்டிய கோவா, ஸ்பார்க்கிளிங் ஸ்டார்ஸ் அணி, 30 ஓவரில், எட்டு விக்கெட் இழந்து, 97 ரன் மட்டும் எடுத்தது. திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. சதமடித்து (126 ரன்) அசத்தலாக ஆடிய அபிநந்தன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி - கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணி இடையே இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது. டாஸ் வென்று பேட்டிங் செய்த ைஹதராபாத் அணி, 30 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 156 ரன் எடுத்தது. பவாஸ் 46 பந்துகளில், 51 ரன் எடுத்தார்.இலக்கை விரட்டிய, கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணி, நிதானமாக விளையாடி, 27.5 ஓவரில், நான்கு விக்கெட்டுகளை இழந்து, 157 ரன் எடுத்து வெற்றி பெற்று, இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அசத்தலாக ஆடி, 49 பந்துகளில், 53 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட யாதவ் கிருஷ்ணன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இன்று காலை மூன்றாவது இடத்துக்கான போட்டி நடக்கிறது; இதில், ைஹதராபாத், கோச்சிங் பியாண்ட் அணி - கோவா ஸ்பார்க்கிளிங் ஸ்டார்ஸ் அசோசியேஷன் அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி மதியம், 12:30 மணிக்கு துவங்குகிறது. திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி - கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டியை காண, பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என ஸ்கூல் ஆப் கிரிக்கெட் பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை