மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
24-Jan-2025
திருப்பூர்: திருப்பூரில், டூவீலரை திருடி சென்ற நபரை, மூன்று மணி நேரத்தில் மீட்டு, இருவரை கைது செய்தனர்.திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ஏட்டு மணிவாசகம் ரோந்து மேற்கொண்டிருந்தார். கொங்கு மெயின் ரோடு எஸ்.வி., காலனி அருகே பனியன் நிறுவனத்தில் நின்றிருந்த டூவீலரை ஒருவர் திருடி சென்றார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ரோந்து போலீஸ்காரர் விசாரித்தார். அப்பகுதியில் அடுத்தடுத்து விசாரித்து, டூவீலரை திருடி கொண்டு தப்பி சென்ற நபரை, மூன்று மணி நேரத்தில் பிடித்து டூவீலரை பறிமுதல் செய்தனர். திருட்டு தொடர்பாக, கார்த்திக், 25, சக்திவேல், 25 என, இருவரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
24-Jan-2025