மாஸ்டர் ெஹல்த் செக்கப் போன்று காது பரிசோதனையும் அவசியமானது
திருப்பூர்: 'வாழ்வின் அழகே உறவாடுவதில் தான் உள்ளது; அதற்கு கேட்கும் திறனும், பேசும் திறனும் முக்கியம்.எனவே, கேட்கும் திறன் கொண்ட காதுகளின் பயன்பாடு என்பது மனிதர்களுக்கு அதிமுக்கியமானது; அதை பாதுகாப்பது மிகமுக்கியம்' என்கின்றனர் எச்.ஏ.சி., நிறுவன உரிமையாளர்கள் ஆடியாலஜிஸ்ட் கணேஷ் மற்றும் தாரணி.அவர்கள் கூறியதாவது:காது என்பது, மனம் - சமூக முக்கியத்துவம் கொண்ட உறுப்பு. காதுகளுக்கு, மூளையுடன் நெருங்கிய தொடர்புண்டு. மூளையில் ஏற்படும் சில வகை நோய் தொற்று, மூளை காய்ச்சல் ஆகியவை காதுகளையும் பாதிக்கும். காதில் உள்ள திரவம் காரணமாக தான் நாம் சமநிலையில் இயங்க முடிகிறது.இந்த சமநிலை தவறும்போது தலைசுற்றல் ஏற்படுகிறது. புட்டாலம்மை (மம்ஸ்) என்ற அம்மை நோய், காதுகளில் நேரடியாக ஏற்படக்கூடிய தொற்று, காது செவிப்பறையில் ஏற்படும் துவாரம் உள்ளிட்ட பாதிப்பாலும், ஹேர்செல்ஸ், ஹெட்போன் மற்றும் இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு என, பல காரணங்களால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.காதுகேளாமையால் குழந்தைகளுக்கு காதுகேளாமை குறைபாடால், மொழியை சரியாக பேச முடியாமல் இருக்கலாம்; இதற்கு, எங்கள் நிறுவனத்தின் நிபுணர்களை அணுகுவதன் மூலம் தீர்வு பெறலாம்.உடலுக்கு 'மாஸ்டர் ெஹல்த் செக்கப்' செய்து கொள்வது போன்று, கண்களுக்கு சில ஆண்டு களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது போன்று, காதுகளுக்கும் அதே முக்கியத்துவத்தை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.கேட்கும் திறன் குறைவதை ஆரம்ப நிலையிலேயே அறிந்துக் கொண்டால், தீர்வு காண்பது சுலபம். காது கேளாமை தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் எங்கள் நிறுவனத்தின் வாயிலாக நிரந்தர தீர்வு காண முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.