உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடிகளில் பயின்றால் முன்பருவக்கல்வி சான்றிதழ்

அங்கன்வாடிகளில் பயின்றால் முன்பருவக்கல்வி சான்றிதழ்

திருப்பூர்; அங்கன்வாடிகளில் குழந்தைகள் முன்பருவக்கல்வி பயில்கின்றனர். அதாவது, 2 முதல் 3; 3 முதல் 4; 4 முதல் 5 என, வயது வாரியாக, மூளை, மனம், சமூகம், அறிவு மற்றும் மொழி வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது.குழந்தைகளின் திறமை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, மூன்று ஆண்டு களுக்கு ஆய்வு அட்டையில் பதிவு செய்யப்படுகிறது. ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, குழந்தைகளை அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது:அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து நிலை, கற்றல் திறன் மற்றும் சுகாதார நிலை ஆகியவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வின் வாயிலாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிரச்னைகள் இருந்தால், அவற்றை கண்டறிந்து உரிய உதவிகளை வழங்க முடிகிறது.அதேபோல, ஐந்து வயது பூர்த்தியாகி தொடக்கப்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இதன் வாயிலாக, அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக் கப்பள்ளிகளில், குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.வசதிகள் மேம்பட வேண்டும்திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பெரும்பாலான குடும்பங்களில், கணவன் - மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகள் திறனை வளர்ப்பதற்கும், பாதுகாப்புக்கும் அங்கன்வாடிகள் துணைபுரிகின்றன. அங்கன்வாடிகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை