மேலும் செய்திகள்
குப்பை கொட்டக்கூடாது; போராட்டம் நடத்த முடிவு
05-Jul-2025
அனுப்பர்பாளையம்; அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட இந்திய கம்யூ., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில், கொட்டப்பட்டு வருகிறது.பொதுமக்களின் கடும் எதிர்ப்பால், போலீஸ் பாதுகாப்புடன் ஜி.என்., கார்டன் பகுதியில் குப்பை கொட்டப்பட்டுவருகிறது. குப்பை லாரியை சிறை பிடித்து போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட மாநகராட்சி முயற்சித்து வருவதாக கூறி, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் குப்பை கொட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து, இ.கம்யூ., கட்சியினர் 'குப்பை கொட்டுவதை உடனே நிறுத்து. மக்களை போராட துாண்டாதே,' என பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
05-Jul-2025