உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுமைய போட்டிகள் நடத்த ஆயத்தமாகிறது கல்வித்துறை

குறுமைய போட்டிகள் நடத்த ஆயத்தமாகிறது கல்வித்துறை

திருப்பூர் : மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் குறுமைய விளையாட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான பணிகளை பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது.திருப்பூர் கல்வி மாவட்டம், விளையாட்டுத்துறையை பொறுத்த வரை திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் என ஏழு குறுமையங்களை உள்ளடக்கியதாக பிரிக்கப்பட்டுள்ளது.கல்வியாண்டு துவங்கியதும், 14, 17 மற்றும், 19 வயது பிரிவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டியில் சிறந்த விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய, குறுமைய விளையாட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.போட்டிகளில் வெற்றி பெறுபவர் வட்டார போட்டிக்கும், அதில் தேர்வு பெறுபவர் மாவட்ட போட்டியிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர் மாநில போட்டியில் பங்கேற்கவும், பள்ளி கல்வித்துறை வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. நடப்பு 2025 - 2026ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டி அட்டவணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.அதன்படி ஜூன், 25ல் குறுவட்ட அளவிலான போட்டிகளுக்கு நிர்ணயக் கூட்டம் நடத்துதல், ஜூன், 30ல் போட்டி துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை