உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடுவதைக் கூடம் செயல்படுத்த முனைப்பு

ஆடுவதைக் கூடம் செயல்படுத்த முனைப்பு

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை: பல்லடம் ரோடு, தென் னம்பாளையம் சந்தைப்பேட்டை வளாகத்தில் மாநகராட்சி ஆடுவதைக் கூடம் தற்போது செயல்பட்டு வருகிறது. கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, முத்திரையிடப்படாத இறைச்சி விற்பனை செய்வது தெரிந்தால், அதைப் பறிமுதல் செய்து அழிப்பதோடு, 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். ஆடுவதைக் கூடம் நீண்ட காலமாக செயல்படாமல் பூட்டிக்கிடந்தது. இறைச்சி விற்பனையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் இந்த கூடம் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. கண்காணிப்புஅவசியம்கமிஷனரின் இந்த எச்சரிக்கை, அறிவிப்போடு மட்டும் நின்று விடாமல் முறையாக செயல்பாட்டுக்கு வர வேண்டும். உரிய பிரிவு அதிகாரிகள் இதை முறையாகக் கண்காணித்து, அதன் செயல்பாட்டை முழுமையாக்க வேண்டும். சுகாதாரமற்ற முறையில், நடைபெறும் கால்நடை வதை செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை