உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எட்டாக்கனியான அத்திக்கடவு குடிநீர்

எட்டாக்கனியான அத்திக்கடவு குடிநீர்

பொங்கலுா : பொங்கலுார் வட்டாரத்தில் கோடை மழை கை கொடுக்கவில்லை. இதனால் பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் நடைபெற்ற பகுதிகளை தவிர பிற பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஊராட்சி நிர்வாகங்கள் நிலத்தடி நீரை முடிந்த அளவு வினியோகித்து வருகின்றன. ஆனால், அது போதுமானதாக இல்லை. பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். நிலத்தடி நீர் போக அத்திக்கடவு குடிநீர் பொங்கலுார் பகுதிக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது பொங்கலுார் மேற்கு பகுதி வரை கிடைக்கும் அத்திக்கடவு குடிநீர் கிழக்குப் பகுதிக்கு வருவதில்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !