உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதுக்கடையில் முதியவர் கொலை

மதுக்கடையில் முதியவர் கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தேவேந்தர் வீதியை சேர்ந்த ஆறுமுகம், 70, நேற்று, தன் அண்ணன் மகனான சுரேஷ் என்பவருடன், என்.என்., பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த, காமராஜபுரத்தை சேர்ந்த தமிழ்ராஜா, 23, என்பவர், ஆறுமுகத்திடம் தண்ணீர் கேட்டுள்ளார். இல்லை என்று கூறியதையடுத்து, இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தமிழ்ராஜா, ஆறுமுகத்தை கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்பக்க தலையில் காயத்துடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாராபுரம் போலீசார், தமிழ்ராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ