உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சோமனுார் கோட்டத்தில் இணைந்த மின்வாரிய பிரிவு அலுவலகங்கள்

சோமனுார் கோட்டத்தில் இணைந்த மின்வாரிய பிரிவு அலுவலகங்கள்

பல்லடம்: பல்லடம் மின் வாரிய கோட்டத்தின் கீழ் உள்ள சில பிரிவு அலுவலகங்கள், சோமனுார் கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது. பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி அறிக்கை: பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த பாப்பம்பட்டி, சித்தநாயக்கன்பாளையம், செலக்கரிச்சல் ஆகிய மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், நிர்வாக காரணங்களுக்காக, கோவை தெற்கு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, சோமனுார் கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், ஆக., 18 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேற்கூறிய பிரிவு அலுவலகங்களுக்கு கீழ் உள்ள நுகர்வோர், மின் பயனாளிகள் உள்ளிட்டோர், சேவைகளை பெறவும், புகார்களை தெரிவிக்கவும், சோமனுார் கோட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ManiMurugan Murugan
ஆக 23, 2025 00:25

ManiMurugan Murugan மின் வாரிய நிலுவை த் தொகைகள் பெறப்படும் வேண்டும் வரவு செலவு நீர் வை கணக்குகள் மக்களுக்கு தெரிய ப் படுத்த வேண்டும்


புதிய வீடியோ