உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் வாரிய பொறியாளருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறை

மின் வாரிய பொறியாளருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறை

திருப்பூர்:மின் வழித்தடம் மாற்றியமைக்க, 2,700 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திருப்பூர் மாவட்டம், உடுமலை, வடுகபாளையத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், 50. தனக்கு சொந்தமான கட்டடத்தை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, வீட்டின் மேல் சென்ற மின்கம்பிகளை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நினைத்தார். இதை நண்பர் குமார், 52 என்பவரிடம் தெரிவித்தார். கடந்த 2008 நவ., மாதம், குடிமங்கலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணியாற்றிய பன்னீர்செல்வம், 66 என்பவரிடம், இதுதொடர்பாக குமார் வேண்டினார். இதற்கு, 2,700 ரூபாயை லஞ்சமாக பன்னீர்செல்வம் கேட்டார்.லஞ்ச பணத்தை குமாரிடம் பெற்ற போது பன்னீர்செல்வத்தை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்லதுரை, லஞ்சம் வாங்கிய பன்னீர்செல்வத்துக்கு, மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜாரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை