உடற்பயிற்சி ஆடை உற்பத்தி எம்பரர் நிட்டிங் புரட்சி
திருப்பூர்: உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு நன்மை பயக்கும் ஆடையை தயாரித்து அசத்தியுள்ளது, 'எம்பரர் நிட்டிங்' நிறுவனம்.இதன் நிறுவனர், 'எம்பரர்' பொன்னுசாமி கூறியதாவது: நாம் தினசரி பயன்படுத்தும் ஆடையுடன் உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் இருந்த வெளியேறும் வியர்வையால் ஏற்படும் ஈரத்தன்மை, கிருமிகளின் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கும் வகையில், 'எம்பரர் யாத்ரா' என்ற பிராண்ட் உருவாக்கில், 'ஆக்டிவ் வேர்' எனப்படும் ஆடைகளை தயாரித்துள்ளோம். இந்த ஆடை அணிந்து உடற்பயிற்சி செய்யும் போது, பல மணி நேரம் புத்துணர்ச்சி கிடைக்கும்; வியர்வை மற்றும் கிருமி தொற்றால் பாதிப்பு ஏற்படாது.இவ்வகை ஆடைகள், 'பிரைம் டிரை' தொழில்நுட்பத்தில், செயற்கை நுாலிழையால் உருவாக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில், நவீன தொழிற்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன், பல கட்ட ஆராய்ச்சிக்கு பின், திருப்பூரில், எங்கள் சொந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண், பெண்களுக்கென பிரத்யேக வடிவமைப்புடன் ஆடை தயாரிக்கப்படுகிறது.கடந்த, 6 ஆண்டுகளாக ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறோம்.பல்வேறு வண்ணம் மற்றும் வடிவமைப்பில் உயர்தரத்துடன், அணிவோருக்கு ஒரு கம்பீர தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையம், திருப்பூர், நாதம்பாளையம், வட வள்ளி, ஈரோடு டெக்ஸ்வேலி உள்ளிட்ட இடங்களில் செயல்படுகிறது. www.emperosyathra.comஎன்ற இணையதளத்தின் வாயிலாக 'ஆன் லைன்' வர்த்தகமும் மேற்கொள் ளப்படுகிறது.