/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருத்தப்பட்ட சட்டத்தில் முன்னுரிமை மினி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
திருத்தப்பட்ட சட்டத்தில் முன்னுரிமை மினி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
பல்லடம், : திருப்பூர் மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம் பல்லடத்தில் நடந்தது.மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில், செயலாளர் நாகராஜ் மற்றும் பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பது மற்றும் சங்கத்துக்கானநிதி ஆதாரம் திரட்ட வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் மினி பஸ்கள் நலிவடைந்துள்ளதால், தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ள திருத்தப்பட்ட மினி பஸ் அனுமதி சட்டத்தில், ஏற்கனவே உள்ள மினி பஸ் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சுப்பிரமணி நியமிக்கப்பட்டார்.