உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலைவாய்ப்பு திறன் பயிற்சி

வேலைவாய்ப்பு திறன் பயிற்சி

சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், கருமாபாளையத்தில் ஏழு நாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடக்கிறது. நேற்று, மாணவர்களின் சுயவேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த, தேனீ வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.தேனீ வளர்ப்பாளர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 'தேனீ வளர்ப்பதால் பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்துவது' எனும் தலைப்பில், பயிற்சி அளித்தார். திருப்பூர் கால்நடை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பல்கலை பேராசிரியர் மதிவாணன் 'கோழி வளர்க்கும் முறை' எனும் தலைப்பில் பேசினார். கருமாபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி