மேலும் செய்திகள்
பிரச்சனையும், தீர்வும் . . .
14-Dec-2024
உடுமலை; உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் பகுதியில், தனியார் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.உடுமலை தளி ரோட்டில், ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாலம் அமைந்துள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில், தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதோடு, வாகனங்களையும் நிறுத்தி ஆக்கிரமித்து வருகிறது.அதே போல், சுரங்க பாலத்திலிருந்து செல்லும் வாகனங்கள், மூணாறு ரோட்டிலிருந்து, தளி ரோட்டிற்கு எதிரே வருவதை தடுக்கும் வகையில், மேம்பாலம் கீழ் பகுதியில், வழித்தடம் உள்ளது.மேம்பாலத்தின் இருபுறமும், சர்வீஸ் ரோடு உள்ள நிலையில், தனியார் கண் மருத்துவமனை பகுதியில், பிரதான ரோட்டையும், குடியிருப்புகளுக்கு செல்லும் வழித்தடம் ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்தப்படுவதோடு, வணிக நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளது.இதனால், சுரங்கப்பாலம் வழியாக வரும் வாகனங்கள், யூனியன் ஆபீஸ் பகுதியில், விதி மீறி எதிரே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.அதே போல், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதோடு, குப்பை, மருத்துவ கழிவுகள் கொட்டும் மையமாகவும் மாறியுள்ளது.இதனால், மலைபோல் கழிவுகள் தேங்கி, அவ்வப்போது அவற்றுக்கு தீ வைப்பதால், பாலத்தின் கட்டுமானம் பாதிக்கப்படுவதோடு, மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் ஏற்படுகிறது.எனவே, ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாலம் பகுதிகளில், வாகனங்கள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து வழித்தடங்களை மீட்கவும் வேண்டும்.
14-Dec-2024