உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில்முனைவோர் கற்றுணர வேண்டும்: இளம் தலைமுறையினருக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு

தொழில்முனைவோர் கற்றுணர வேண்டும்: இளம் தலைமுறையினருக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு

டாடா குழும வளர்ச்சியில், இந்த தேசத்தின் வளர்ச்சியும் உட்பொதிந்ததாக உள்ளது. நாட்டின் மிக முக்கியமான மற்றும் சிறந்த தொழிலதிபர், எல்லாவற்றுக்கும்மேல் தேசப்பற்று மிக்கவர், ரத்தன் டாடா. அவரது விடா முயற்சி, எந்த பொருளையும் உச்சபட்ச தரத்தில் தயாரிப்பது, எதிலும் தனித்துவத்தை கடைபிடிப்பது, சமூக பார்வை, சேவைமனப்பான்மை ஆகியவை போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவை. அவரது ஒவ்வொரு செயலிலும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும் அம்சம் கட்டாயம் இருக்கும்.தொழில் செய்வது, வெறுமனே பொருள் ஈட்டுவதற்காக மட்டுமல்ல, நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் என்கிற அர்ப்பணிப்புடன் கூடிய டாடாவின் தொழில் கொள்கை, நம் எல்லோருக்கும் சிறந்த பாடம்;அந்த உன்னதமான வாழ்க்கை பாடத்தை, அனைவரும் குறிப்பாக, தொழில்முனைவோர் ஒவ்வொருவரும், கற்றுணர்ந்து செயல்படவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை