உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

உடுமலை; உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம், சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை, தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் வரும் 21ம் தேதி நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான இந்த இந்நிகழ்ச்சி, சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடக்கிறது.ஓவியப்போட்டியில், ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு 'மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகு', 4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'நீ விரும்பும் மரம்' 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு 'பிளாஸ்டிக் எனும் அரக்கன்', ஒன்பது, பத்து வகுப்புக்கு 'சூடாகும் பூமி', பிளஸ் 1,2 வகுப்புகளுக்கு 'சுற்றுச்சூழலும் வனவிலங்கு பாதுகாப்பும்' உள்ளிட்ட தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.பேச்சுப்போட்டிக்கு, 6 முதல் 8 வகுப்புக்கு 'யானைகளும் காட்டுவளமும்', ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கு 'பிளாஸ்டிக் இல்லா புது வாழ்வு', பிளஸ் 1,2 வகுப்புகளுக்கு 'வன மாசுபாடு தடுக்கவும் வன விலங்குகள் பாதுகாப்பு பற்றி உனது யோசனைகள்' என்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.போட்டிகள் காலை, 9:30 மணி முதல் 1:00 மணி வரை நடக்கிறது. மதியம் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !