உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சம வேலை - சம ஊதியம் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் 

சம வேலை - சம ஊதியம் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் 

திருப்பூர் : சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் திருப்பூரில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு வருகின்றனர். இது குறித்து தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வழங்க வேண்டும். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டாகியும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளதால் இடைநிலை ஆசிரியர்கள் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது. இதனை வலியுறுத்தி, வரும் செப்., மாதம் மாநில அளவில் சிறை நிரப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கான முன்னெடுப்பாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அவ்வகையில், திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று இந்த உண்ணாவிரதம் நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் பத்மராஜ் மாணிக்கமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். பொருளாளர் பாலசந்திரன், துணை தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பலராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ