உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலியோவை ஒழித்தது ரோட்டரி சங்கத்தின் சாதனை

போலியோவை ஒழித்தது ரோட்டரி சங்கத்தின் சாதனை

பல்லடம்; பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.விழாவுக்கு, அதன் தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சிவப்பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர்கள் லோகநாதன், குமர செந்தில்ராஜா, உதவி கவர்னர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூக விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு ரோட்டரி சங்கம் செயல்படுகிறது. போலியோவை அடியோடு ஒழித்ததே ரோட்டரியின் மிகப்பெரும் சாதனையாகும்,'' என்றார். முன்னதாக, டாக் டர் பாலசுந்தரம், இடுவாய் நடராஜ் ஆகியோருக்கு சமூக சேவகர் மற்றும் ஆலய கோமகன் விருதுகள் வழங்கப்பட்டன. வடுகபாளையம் அரசுப் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மரங்களை வெட்டப்படுவதை தவிர்க்கும் நோக்கில், பழைய நோட்டுப் புத்தகங்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கும் 'சுழற்சுவடி' என்ற திட்டமும், அரசுப்பள்ளி மாணவியர், 25 பேருக்கு செல்வமகள் சேமிப்பு திட்டமும் துவக்கி வைக்கப்பட்டது. நிர்வாகிகள் நாராயணசாமி, மனோஜ் அகர்வால், சுரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை