மேலும் செய்திகள்
மோசடி ஆசாமி கைது
25-Apr-2025
பல்லடம் : தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., குறித்த குறைகளை தீர்ப்பதற்கான கூட்டம் நடக்கிறது.பல்லடம் இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் ராஜா கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்களது இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., சார்ந்த சந்தேகங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய தீர்வு காண்பதற்கான முகாம் பல்லடம் அருகே நடக்க உள்ளது. வரும், 27ம் தேதி, இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., சார்பில், பல்லடத்தை அடுத்த, சின்னக்கரை 'லீ சார்க் குளோபல்' பனியன் நிறுவனத்தில், காலை, 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த முகாமில், இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., திட்டங்களில் இணைந்துள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர், சிறப்பு முகாமில் பங்கேற்று குறைகள், சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
25-Apr-2025