உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இ.எஸ்.ஐ. - பி.எப். சேவை விழிப்புணர்வு

 இ.எஸ்.ஐ. - பி.எப். சேவை விழிப்புணர்வு

திருப்பூர்: அகில இந்திய பட்டயக்கணக்காளர் நிறுவனம், திருப்பூர் கிளை சார்பில், இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., சேவைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. திருப்பூர் கிளை தலைவர் அருண் தலைமை வகித்தார். கோவை இ.எஸ்.ஐ. மண்டலதுணை இயக்குனர் கார்த்திகேயன், பங்கேற்று, 'ஸ்ப்ரீ - 2025' திட்டம் குறித்தும், வரும், 31ம் தேதிக்குள், இ.எஸ்.ஐ பதிவு செய்வதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார். தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் பயன்பெறலாம் என்று விளக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) அமலாக்க அலுவலர் வாசுதேவன், மைதிலி ஆகியோர், வருங்கால வைப்பு நிதி சேவைகள் குறித்து பேசினர். பி.எப்., பதிவு மற்றும் சட்டப்பூர்வமாக பின்தொடர்ச்சிகள் குறித்து விளக்கினர். திருப்பூரை சேர்ந்த ஆடிட்டர்கள் கருத்தரங்கில் பங்கேற்று, பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். பதிவின் வாயிலாக, அரசின் சமூக பாதுகாப்பு பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை, சங்க உறுப்பினர் மகேஷ் தொகுத்து வழங்கினார், ஆடிட்டர் சங்க கிளை செயலாளர் சபரிஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை