உள்ளூர் செய்திகள்

தடகளத்தில் அதகளம்

திருப்பூர், அக். 7-திருப்பூரில் நடந்த மாவட்ட மூத்தோர் தடகளப் போட்டியில், 251 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 15வது ஆண்டு, மாவட்ட மூத்தோர் தடகளப் போட்டி, கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார். விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.மாநில தடகள சங்க துணைத்தலைவர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 100, 200, 400, 800, 1,500, 5,000 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில், ஆர்வமுடன், 251 பேர் பங்கேற்றனர். 30 வயதுக்கு மேற்பட்டோர் முதல், 85 வயதை கடந்தவர் வரை பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை