உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏழுமலையான் கோவில் புரட்டாசி சனி வழிபாடு; மலை ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஏழுமலையான் கோவில் புரட்டாசி சனி வழிபாடு; மலை ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்

உடுமலை,: உடுமலை அருகே, அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று, மலையேறி சென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட, பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் பயணித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்.ஆண்டு தோறும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று அதிகாலை முதலே, மலைப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மலை மேலுள்ள, தீர்த்த கிணற்றில், நீர் எடுத்து, அவுல், பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை கொண்டு நைவேத்தியம் தயாரித்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.பக்தர்கள் வருகையை முன்னிட்டு, மலையடிவாரம் முதல், கோவில் வளாகம் வரை, வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வசதிக்காக, தடுப்புகள், பந்தல் அமைக்கப்பட்டிருந்தன.வனப்பகுதிகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில், வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி