மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் நல சங்க கூட்டம்
12-Dec-2024
உடுமலை,; உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலசங்க கூட்டம் நடந்தது.உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில், முன்னாள் ராணுவ வீரர் நலசங்க கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நாயப் சுபேதார் நடராஜ்கண்ணன், உலகநாதன் முன்னிலை வகித்தனர்.குடியரசு தினம் கொண்டாடுவது, பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறும் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உடுமலையைச்சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் செந்தில்குமார் மறைவுக்கு, அனைவரும் அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.
12-Dec-2024