உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுரங்க பாலம் கட்ட  குழி தோண்டும் பணி

சுரங்க பாலம் கட்ட  குழி தோண்டும் பணி

திருப்பூர்: திருப்பூரின் பிரதான ரோடான குமரன் ரோட்டின் குறுக்கில், நொய்யல் பாலம் அருகே சுரங்க பாலம் கட்டப்படுகிறது. பார்க் ரோட்டையும், யுனிவர்சல் சந்திப்பு ரோட்டையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இப்பணி தற்போது துவங்கி நடந்து வருகிறது. கடந்த வாரம் முதல் இந்த பகுதியில் வாகனப் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதையடுத்து சுரங்க பாலம் அமையும் இடத்தில் குமரன் ரோட்டின் குறுக்கில் ஆழமான குழி தோண்டும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானத்துக்கேற்ற அளவில் குழி தோண்டிய பின் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு, சுரங்க பாலம் பணி நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை