அன்று பரபரப்புடன்... இன்றோ பாழடைந்து!
பொங்கலுார்; பொங்கலுாரில் டெலிபோன் அலுவலகம் உள்ளது. ஒரு காலத்தில் பரபரப்பாக இயங்கியது. இன்று போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி பாழடைந்த கட்டடமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் கூறுகையில், ''5ஜி வரை தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. பி.எஸ்.என்.எல்., கிராமப்புறங்களில் அதிக கட்டடங்களை வைத்துள்ளது. கூடுதல் டவர்களை நிறுவி அனைத்து இடங்களுக்கும் சிக்னல் கிடைக்க வழி செய்யலாம்'' என்றனர்.