உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க எதிர்பார்ப்பு

ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க எதிர்பார்ப்பு

- நமது நிருபர் -தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு, திருப்பூர், ஊத்துக்குளி ரோடு அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மூத்த நிர்வாகி ராமசாமி, கொடியேற்றினார்.மாநிலச்செயலாளர் சின்னசாமி துவக்கி வைத்தார். மாவட்ட தலைவராக மூர்த்தி, செயலாளராக கணேசன், பொருளாளராக பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன், மாநில செயலாளர் சேகர் ஆகியோர் பேசினர். மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், மாநாட்டை நிறைவு செய்தார்.கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகட்டி கொடுத்தல், இ.எஸ்.ஐ., திட்டம் ஏற்படுத்துதல், பொங்கல் கொண்டாட, நலவாரியம் மூலம் 5,000 ரூபாய் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ