உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவுட்போலீஸ் ஸ்டேஷன் அமைக்க எதிர்பார்ப்பு

அவுட்போலீஸ் ஸ்டேஷன் அமைக்க எதிர்பார்ப்பு

உடுமலை; உடுமலை அரசு மருத்துவமனையில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை வ.உ.சி., வீதியில், அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு உடுமலையை சுற்றியுள்ள கிராமங்கள், மலைவாழ் மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். சுற்றுப்பகுதிகளில், விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். விபத்து தொடர்பாக விசாரிக்கவும், போலீசாரும் இங்கு வரவேண்டியதுள்ளது. எனவே, உடுமலை அரசு மருத்துவமனையில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். போலீஸ் உயரதிகாரிகளும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை