உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழைநீரை குளங்களில் சேமிக்க எதிர்பார்ப்பு!

மழைநீரை குளங்களில் சேமிக்க எதிர்பார்ப்பு!

திருப்பூர்: திருப்பூரில் ஆண்டு சராசரி மழையளவு குறைவு என்ற போதிலும், பருவமழை சமயங்களில் அதிகளவு மழை கொட்டி தீர்க்கிறது. மழையின் போது, நல்லாறு மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சாயக்கழிவுகள், ரசாயன கழிவுகள் மற்றும் நகர சாக்கடையால் நொய்யல் ஆறு மாசடைந்துள்ளது. இந்நீரை குடிக்கும் கால்நடைகள், நோய் தொற்றுக்கு ஆளாகின்றன என, விவசாயிகள் கூறுகின்றனர்.எனவே, ஆறு ஓடைகளில் பெருக்கெடுக்கும் மழைநீரை, வாய்ப்புள்ள இடங்களில், அவற்றை ஒட்டியுள்ள குளம், குட்டைகளில் சேகரிக்க வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி